
உலகம் முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக பொருளாதார மந்த நிலை காரணமாக சிறிய நிறுவனங்கள் முதல் பிரபல நிறுவனங்கள் வரை அனைத்து தரப்பிலும் ஊழியர்கள் பணிநீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேவையற்ற செலவுகளை குறைக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிறுவனத்தின் சார்பாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தியாவின் மிகவும் பிரபலமான உணவு டெலிவரி நிறுவனமான swiggy அதிரடியாக தன்னுடைய 400 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது .
கடந்த வருடம் இந்த நிறுவனத்தில் இருந்து 380 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. குறிப்பாக தொழில்நுட்பம், வாடிக்கையாளர் சேவை, நிர்வாகம் போன்ற பிரிவுகளில் இந்த ஆள் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இந்த நிறுவனத்தில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.