
இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18-வது ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் சென்னை அணி மும்பையுடன் நடந்த ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்ற நிலையில் அதற்கு அடுத்து 5 தோல்விகள். இதனால் சென்னை அணியின் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், நேற்று லக்னோ அணியுடன் மோதியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் லக்னோ முதலில் பேட்டிங் செய்தது. கேப்டன் ரிஷப் பண்ட் அரை சதம் கடந்த நிலையில் இறுதியில் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக ஜடேஜா மற்றும் பத்திரனா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து சென்னை அணி களமிறங்கிய நிலையில், ஷேக் ரக்ஷித், ரச்சின், ஜடேஜா மற்றும் ராகுல் திரிபாதி ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆக சிவம் துபே மற்றும் தோனி ஜோடி சேர்ந்தனர். சிவம் துபே நிதானமாக விளையாடிய நிலையில் தோனி அதிரடியாக விளையாடினார். இறுதியில் சென்னை அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. கேப்டன் தோனி 11 பந்துகளில் 4 பவுண்ட்ரிகள் ஒரு சிக்சர் என மொத்தம் 26 ரன்கள் எடுத்திருந்தார். மேலும் இந்த போட்டியின் மூலம் ஐபிஎல் தொடரில் தங்களுடைய இரண்டாவது வெற்றியை சென்னை அணி பதிவு செய்துள்ளது.