
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீப காலமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அதிகரித்து வருவது பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் காரைக்குடி அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி விடுதியில் தங்கி ஒரு மாணவி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த மாணவிக்கு விடுதி காவலாளி அழகப்பன்(56) பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த காரைக்குடி அனைத்து மகளிர் போலீசார் அழகப்பனை அதிரடியாக கைது செய்தனர். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் அழகப்பா தொழில்நுட்ப கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.