
சென்னை மாவட்டத்தில் அனிதா என்ற சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் அனிதா ஈர கையால் செல்போனுக்கு சார்ஜ் போட்டுள்ளார். இதனால் மின்சாரம் தாக்கி அனிதா தூக்கி வீசப்பட்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அனிதாவை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அனிதா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.