ஹைதராபாத்தில் உள்ள ஒரு கல்லூரியில் விளையாட்டு போட்டி நடைபெற்றது. அப்போது கிரிக்கெட் விளையாடிய ஒரு மாணவன் திடீரென மயங்கி விழுந்தார். அவரை சக மாணவர்கள் மீது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு மாணவனை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். பின்னர் போலீசார் மாணவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்து போலீசார் வெயிலின் தாக்கம் காரணமாக மாணவர் உயிரிழந்தாரா? அல்லது மாரடைப்பால் உயிரிழந்தாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.