
தென்காசி மாவட்டத்திலுள்ள குற்றாலத்தில் நடைபெற்ற பண்ணை சுற்றுலாவில் கலந்து கொள்வதற்காக கடையம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து அரசு பள்ளி மாணவ மாணவிகள் வேனில் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுடன் ஒரு பெண் ஆசிரியை கூட செல்லவில்லை. இந்த நிலையில் மாணவிகளை குத்து பாடலுக்கு நடனம் ஆட வைத்து அதை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பரப்பியுள்ளனர்.
இந்த வீடியோ வைரலானதால் பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதனால் சம்பந்தப்பட்ட இரண்டு ஆசிரியர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்களிடம் துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டது. அவர்களிடம் இரண்டு கட்டங்களாக விசாரணை நடைபெறுவதாக கூறப்படுகிறது.