தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் மெயின் அருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் குளிப்பதற்காக தனித்தனி வரிசைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மெயின் அருவியில் ஆண்கள் குளித்துக் கொண்டிருக்கும் பகுதியில் நீருடன் சேர்ந்து பாறை கற்கள் உருண்டு வந்து விழுந்ததால் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

இவர்கள் காவல்துறையினரால் மீட்கப்பட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து பாறை கற்கள் விழும் என்பதால் முன்னெச்சரிக்கையாக தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. .