ஈரானின் தெற்கு பகுதியிலுள்ள பந்தர் அப்பாஸ் நகரத்தில் அமைந்துள்ள ஷாஹித் ராஜீ துறைமுகத்தில் இன்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி  406 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியானது.

ஆரம்பத்தில், காயமடைந்தோர் எண்ணிக்கை 281 என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஈரான் தேசிய அவசரநிலை அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மொஜ்தபா கலேதி அளித்த தகவலை இராணுவ செய்தி நிறுவனம் (IRNA) புதுப்பித்து அறிவித்தது.

துறைமுகப் பணியாளர்கள் அதிகமாக இருந்ததால், பலர் காயமடைந்திருக்கலாம் அல்லது உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வெடிப்பு நடைபெறும் நேரத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஒமான் நாட்டில் அணுசக்தி பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

“>

 

விபத்து தொடர்பான ஆரம்பிகால விசாரணைகளில், துறைமுகக் கரையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பல கொள்கலன்களில் ஏற்பட்ட வெடிப்பே காரணம் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சமூக ஊடகங்களில் பரவும் காணொளிகளில், சம்பவ இடத்திலிருந்து காடு எரியும்படி கருப்பு புகை மேல் எழும் காட்சிகள் பதிவாகியுள்ளன.