அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் உள்ள டெஸ்லா நிறுவனத்துக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோவில், பல டெஸ்லா கார்கள் தீப்பற்றிக் கொண்டிருக்கும் காட்சிகள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் டெஸ்லா நிறுவனத்திற்கும் அதன் சொத்துகளுக்கும் எதிராக தொடர்ச்சியாக நடைபெறும் போராட்டங்கள் மற்றும் சேதப்படுத்தும் செயல்களின் ஒரு பகுதியாகக் காணப்படுகிறது. லாஸ் வேகாஸ் காவல்துறை வெளியிட்ட தகவலின் படி, கருப்பு உடை அணிந்த நபர் பல டெஸ்லா வாகனங்களை தீ வைத்து எரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், அந்த நபர் மோலட்டொவ் காக்டெய்ல் (Molotov cocktail) மற்றும் துப்பாக்கி கொண்டு தாக்குதல் நடத்தி இருப்பதாகவும், குறைந்தபட்சம் 5 டெஸ்லா வாகனங்கள் சேதமடைந்து, அதில் 2 வாகனங்கள் முற்றிலும் தீப்பற்றியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“>

 

இந்த சம்பவத்திற்குப் பிறகு, பல அரசியல் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் , தனது சமூக ஊடகக் கணக்கில் இந்த வீடியோவைப் பகிர்ந்து, “இது மிகவும் கொடூரமான மற்றும் தீய செயலாகும். இது உடனே நிற்க வேண்டும்!”  என்று பல தரப்பட்ட  கண்டனம் தெரிவித்து வருகின்றனர் . டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், இந்த தாக்குதலை “இந்த அளவிலான வன்முறை மிகவும் மோசமானது மற்றும் முற்றிலும் தவறானது.”, “டெஸ்லா நிறுவனம் வெறும் மின்சாரக் கார்களை மட்டுமே தயாரிக்கிறது. எங்களுக்கு எதிராக இந்த வகையான தீவிர நடவடிக்கைகள் நடத்தப்படுவதற்குத் காரணமே இல்லை” என்று தனது சமூக ஊடகப் பதிவில் தெரிவித்தார்.

காவல்துறையினர் இந்த தாக்குதலை “திட்டமிட்ட தாக்குதல்” என்று கூறியுள்ளது மேலும் , அது பொதுமக்களுக்கு எவ்வித அபாயத்தையும் ஏற்படுத்தவில்லை என்று உறுதிப்படுத்தினர். மேலும், தாக்குதலுக்குப் பயன்படுத்திய வெடிகுண்டுகள், ஆயுதங்கள், ஸ்ப்ரே பேயிண்ட் உள்ளிட்ட ஆதாரங்களை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். தற்போது, எதிர்க்கட்சி மற்றும் ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர், மேலும் குற்றவாளியை விரைவில் கைது செய்ய நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.