மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில் உள்ள பாட்லாபூர்-அமர்நாத் சாலையில் நேற்று மாலை இரு கார்கள் மோதியதால் விபத்து நடந்தது. இந்த மோதலில் முன் பகையின் காரணமாக காரில் வந்த ஒருவர் சாலையில் நின்று கொண்டிருந்த காரின் மீது மோதினார். அதாவது சாலை ஓரத்தில் SUV வெள்ளை டொயோட்டா ஃபார்ட்யூனர் கார் நின்று கொண்டிருந்தது.

அந்த காரின் பின் பகுதியில் தாய் தனது குழந்தையுடன் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்கு பின்னால் கருப்பு டாட்டா ஹரியர் காரில் அங்கு வந்தனர். திடீரென அவர்கள் நின்று கொண்டிருந்த SUV வெள்ளை டொயோட்டா கார் மீது வேகமாக மோதினர். மீண்டும் மீண்டும் மோதினர் இதனால் காரின் பின்னால் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் 4 பேர் பாதிக்கப்பட்டனர்.

அதோடு காரில் இருந்த தாய் மற்றும் குழந்தைக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது. இதனை சாலையில் நின்று கொண்டிருந்த ஒரு நபர் வீடியோவாக பதிவு செய்து இணையதளத்தில் பதிவிட்டதால் அந்த வீடியோ தற்போது மிகவும் வேகமாக வைரல் ஆகி வருகிறது.

இந்த தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்திய காவல்துறையினர் இரு தரப்பினரின் முன் பகையின் காரணமாக இந்த மோதல் நடந்தது என்று தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

“>