
சென்னை மாவட்டத்தில் உள்ள குன்றத்தூரில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பூந்தமல்லியில் தண்ணீர் லாரி ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் ராஜேஷ் குன்றத்தூரில் இருக்கும் பிரியாணி கடையில் இரண்டு பிரியாணி பார்சல் வாங்கிகொண்டு வீட்டிற்கு வந்துள்ளார். அந்த பிரியாணியை ராஜேஷ், அவரது கங்கை சுகன்யா, சுகன்யாவின் கணவர் மகேஷ் மற்றும் பிள்ளைகள் இணைந்து சாப்பிட்டு உள்ளனர். அப்போது பிரியாணியில் பல்லி இறந்து கிடப்பதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
அதை அப்படியே கடைக்கு எடுத்துச் சென்று கேட்டபோது கடை உரிமையாளர் அலட்சியமாக பதில் அளித்துள்ளார். இதற்கிடையே பிரியாணி சாப்பிட்ட ஐந்து பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து அறிந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பிரியாணி கடையை ஆய்வு செய்தனர். அப்போது சுகாதாரமற்ற முறையில் பிரியாணி தயார் செய்தது தெரியவந்தது. இதனால் கடையை பூட்டி சீல் வைத்தனர். பல்லி விழுந்த பிரியாணி பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.