காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர்  பகுதியை சேர்ந்தவர்கள் ரிச்சர்ட் – மீனா தம்பதி. இவர்களுக்கு தோனி என்ற 12 வயது மகன் இருக்கிறாரா. இவர் 8ம் வகுப்பு படித்து வந்த நிலையில் சம்பவத்தன்று பள்ளிக்குச் செல்ல மறுத்துள்ளான். இதனால் பெற்றோர்கள் அவரை கடுமையாக கண்டித்துவிட்டு, வேலைக்குச் சென்றுள்ளார்கள்.

இதனையடுத்து வீட்டில் தனியாக இருந்த அந்த சிறுவன், தன்மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து, தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிறுவனின் அலறம் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், சிறுவனை மீட்டு மருத்துவமனை யில் சேர்த்துள்ளனர். ஆனால் அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த சிறுவன் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.