தெலுங்கானாவின் சித்திப்பேட்டை மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார். ஆஞ்சநேயுலு என்ற அந்த இளைஞர் பந்து வீசும்போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து சக வீரர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த இளைஞர் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.