தஞ்சாவூர் மாவட்டம் நடுக்காவேரி காவல் நிலையம் முன்பு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சகோதரரை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி இரண்டு சகோதரிகள் தற்கொலைக்கு முயன்றனர். காவல் நிலையம் முன்பே கீர்த்திகா(29), மேனகா(31) இருவரும் திடீரென விஷம் குடித்தனர்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி கீர்த்திகா உயிரிழந்தார். மேனகாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.