
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தில் பணியாற்றிய 28 வயதான விமானி அர்மான், ஏப்ரல் 9-ஆம் தேதி திடீரென இதயநோயால் உயிரிழந்தார். சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட அவர், ஸ்ரீநகரில் இருந்து டெல்லிக்கு விமானத்தை இயக்கிய பின்னர், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய உடனே வாந்தி எடுத்து, பின்னர் விமான நிறுவத்தின் டிஸ்பாச் அலுவலகத்தில் மயங்கி விழுந்தார்.
அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டும், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். சமீபத்தில் விமானிகள் அதிக பறக்கும் நேரம், குறைவான ஓய்வு நேரம், மற்றும் திட்டமிடலில் முறைகேடுகள் ஆகியவை பற்றிக் புகார்கள் கிளம்பியுல்லாது.
இதனிடையே, சிவில் விமான போக்குவரத்து நிர்வாகம் (DGCA), விமானி சோர்வைக் குறைக்கும் நோக்கில் புதிய நடைமுறைகளை முன்மொழிந்தது. ஜூலை 1, 2025 முதல் வார ஓய்வு நேரத்தை 36 மணிநேரத்தில் இருந்து 48 மணி நேரமாகவும், நவம்பர் 1 முதல் இரவுப் பறக்கும் நேரத்தை 13 மணிநேரத்தில் இருந்து 10 மணி நேரமாகவும் குறைக்கவுள்ளதாக DGCA அறிவித்திருந்தது.
ஆனால், புதிய ஒழுங்குகளை நடைமுறைப்படுத்த விமான நிறுவனங்களுக்கு கூடுதல் விமானிகள் தேவைப்படுவதால், அதை 8-10 மாதங்களுக்கு ஒத்திவைக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தற்போது 2019 விதிமுறைகளின் கீழேயே விமானிகள் பணியாற்றி வருகின்றனர்.