தமிழ் சினிமாவின் கேப்டன் என்று அழைக்கப்பட்ட நடிகர் விஜயகாந்த் இதுவரையிலும் நூற்றுக்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த் கமல் ஆகியோருக்கு டப் கொடுத்து முன்னணி நடிகராக இருந்த இவர் திடீரென்று அரசியல் பக்கம் சென்று விட்டார். சினிமாவில் இருந்த காலத்தில் நடிகர் சங்க தலைவராக இருந்தார். அப்போது அவர் சங்கத்தில் உள்ள ஒட்டுமொத்த கடனையும் பாரபட்சம் பார்க்காமல் அடைத்தார் .விஜயகாந்த் கருணாநிதி ஜெயலலிதா போன்ற இரண்டு பேருமே அரசியலில் இருந்த காலகட்டத்தில் இவரும் அரசியலுக்கு வந்து முதல் தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்று அரசியல் தளத்திலும் கவனிக்கப்படும் மனிதர்களாக ஒருவராக மாறினார்.

இதனை தொடர்ந்து அரசியல் வாழ்க்கையில் அடுத்தடுத்த தோல்வி சதித்த இவர் உடல்நல கோளாறு காரணமாக சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்தார். இந்த நிலையில் சிகிச்சைக்கு பிறகு ஓய்வில் இருந்து விஜயகாந்த் மீண்டும் உடல்நல கோளாறு காரணமாக மருத்துவமனையில் இருந்தார் .இந்த நிலையில் விஜயகாந்த் குறித்து வதந்தியான தகவல்கள் பல பரவி வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பாக அவருடைய மனைவி, விஜயகாந்த் நலமாக இருப்பதாகவும் விரைவில் மக்கள் முன் வருவார் எனவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் நடிகர் சூர்யா விஜயகாந்த் உடல்நிலை குறித்து உருக்கமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அண்ணன் விஜயகாந்த் அவர்கள் நலம் பெற பிரார்த்திக்கும் கோடான கோடி இதயங்களில் நானும் ஒருவனாக பங்கேற்கிறேன். இந்த பிரார்த்தனையை அவரை பூரண குணமாக்கி நலம் பெற வைக்கும் என்று தெரிவித்தா.ர் இதை பார்த்த பலரும் தங்களுடைய ஆதரவை வழங்கி வருகிறார்கள்.