தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஸ்ரீ ரெட்டி. இவர் நடிகர்கள் மீது பாலியல் புகார் சுமத்தி மிகவும் பரபரப்பானார். குறிப்பாக நடிகர் பவன் கல்யாணுக்கு எதிராக சர்ச்சை கருத்துக்களை அவர் தெரிவித்து வந்த நிலையில் அதற்கு அவருடைய ரசிகர்கள் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். அதன் பிறகு ஆந்திர சட்டசபை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தோல்வியடைந்தால் கடற்கரையில்நிர்வாணமாக  நடந்து செல்வேன் என ஸ்ரீ ரெட்டி கூறியதாக ஒரு தகவலும் வெளியானது.

இதனால் தற்போது ஆடை இல்லாமல் எப்போது நடப்பீர்கள் என்று அவரிடம் கேள்வி எழுப்பி  வருகிறார்கள். இதற்கு தற்போது ஸ்ரீ ரெட்டி பதிலடி கொடுத்துள்ளார். அவர் தான் ஆடையில்லாமல் நடப்பேன் என்று ஒருபோதும் சொல்லவில்லை. இப்படி கூறியதற்கு உங்களிடம் ஆதாரம் இருந்தால் என்னிடம் காட்டுங்கள். நான் என்னுடைய எக்ஸ் பக்கத்தில் இருந்த எந்த தகவலையும் நீக்கவில்லை. ஒருவேளை நான் சொன்னதை நீங்கள் நிரூபித்தால் கண்டிப்பாக விசாகப்பட்டினம் கடற்கரையில் ஆடை இல்லாமல் நடப்பேன். நான் உங்களுடைய கேலிக்கும் கிண்டலுக்கும் பயப்பட மாட்டேன். மேலும் உங்களை தைரியமாக நான் எதிர் கொள்வேன் என்று கூறியுள்ளார்.