தமிழகத்தை டெல்லியில் அடகு வைத்த ஆட்சி அதிமுக என்ற முதல்வர் ஸ்டாலின் விமர்சித்த நிலையில் அதற்கு எடப்பாடி பழனிச்சாமி பதிலடி கொடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, நீட் தேர்வை முதலில் கொண்டு வந்தது காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி தான். நீதிமன்றம் வரை போராடி அந்த திட்டத்தை அவர்கள் கொண்டு வந்தார்கள். இதே போன்று பிஎம் ஸ்ரீ திட்டத்தை கொல்லைப்புறமாக வரவேற்றுவிட்டு தற்போது ஒன்றுமே தெரியாதது போல் நடிக்கிறார்கள். மீத்தேன் திட்டமும் திமுக ஆட்சியில் தான் கையெழுத்து ஆனது என்று கூறியுள்ளார். மேலும் மீத்தேன் திட்டம் கையெழுத்து ஆனது தொடர்பான பழைய படம் மற்றும் அது தொடர்பாக திமுக எம்பி பேசிய வீடியோ போன்றவற்றையும் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்தி திணிப்பை முதன்முதலில் கொண்டு வந்த காங்கிரஸ் கட்சியோடு கைகோர்த்தது முதல் , இன்றைக்கு கொல்லைப்புறமாக PM Shri திட்டத்தை முதலில் வரவேற்றுவிட்டு, தற்போது எதிர்ப்பு நாடகம் ஆடும் அறைவாலயத்திற்கு -திற்கு , அதிமுகவை பற்றி பேச எள்ளளவாவது அருகதை இருக்கிறதா?

மீத்தேன்- ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டு டெல்டா விவசாயிகளின் உரிமையை அடகு வைத்தவர் தானே நீங்கள்? நீட் என்ற சொல்லையே நாட்டிற்கு அறிமுகப்படுத்தியதே திமுக- காங்கிரஸ் கூட்டணி தானே? அதே கூட்டணியை சேர்ந்தவர்களை வைத்து உச்சநீதிமன்றம் வரை சென்று நீட்டை கொண்டு வர வாதாடி மாணவர்களின் மருத்துவ கனவை அடகு வைத்த பாவிகள்தானே நீங்கள் ? அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம் ஏல முடிவுகள் வரும் வரை கள்ள மவுனம் சாதித்து, பல்வேறு சதிச்செயல்களால் மதுரை மாவட்ட மக்களின் வாழ்வியலையே அடகு வைக்க முயற்சித்தவர்கள் தானே நீங்கள்? 3வது மாடியில் CBI ரெய்டு நடக்க, முதல் மாடியில் முன்று மடங்கு சீட்களை கொடுத்து காலில் விழுந்த கொத்தடிமைகள் தானே நீங்கள்? என்றும் விமர்சித்துள்ளார்.