தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் மட்டுமே இருப்பதால் தற்போதே அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டதோடு கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளும் பரபரப்பாக நடைபெறுகிறது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணி உறுதியாக உள்ள நிலையில் திமுக மீண்டும் அதே கூட்டணியுடன் அடுத்த தேர்தலை சந்திக்கிறது.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சீமான் நாங்கள் யாருடன் கூட்டணி வைக்கலாம் என்று நீங்களே சொல்லுங்கள் என்றார். அப்போது பத்திரிகையாளர்கள் நம் மனதிற்கு ஏற்றவர்களோடு கூட்டணி வைக்கலாம் என்றனர்.

இதைத் தொடர்ந்து பேசிய சீமான் எங்கள் மனதிற்கு ஏற்கவில்லை என்பதுதான் பிரச்சனை. அந்தக் கட்சியும் இந்த கட்சியும் இரண்டு கட்சிகளும் மது ஆலை வைத்துள்ளது. ஊழல் மற்றும் லஞ்சத்தை ஒழிக்க நினைக்கிறோம். ஊழல் மற்றும் லஞ்சம் இல்லாத நிர்வாகத்தை எந்த கூட்டணியில் சேர்ந்து கொடுக்கலாம். நேர்மைக்கும் உண்மைக்கும் இரு பக்கமும் பஞ்சம். அதனால்தான் மக்களுடனே தஞ்சம். மேலும் கூட்டணிக்கு நான் வரவில்லை என்றார்.