
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தான் நாட்டுடன் அனைத்து உறவுகளும் மத்திய அரசு துண்டித்துள்ளதோடு ஏற்கனவே இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களும் உடனடியாக வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் எல்லையில் தற்போது போர் நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதாவது பாகிஸ்தான் மற்றும் இந்தியா எல்லையில் இராணுவ வீரர்களை குவித்து வருவதால் போர் மூழும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நடிகர் பாலிவுட்டில் நடித்துள்ள அமீர் குலால் என்ற திரைப்படத்தினை தடை செய்ய வேண்டும் என்று தற்போது பலரும் வலியுறுத்தி வருகிறார்கள். அதாவது பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நடிகர் பவாத் கான் மற்றும் ஹிந்தி நடிகை வாணி கபூர் ஆகியோர் அபீர் குலால் படத்தில் நடித்துள்ள நிலையில் அடுத்த மாதம் 3-ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.
இந்த படத்தை ஆர்த்தி எஸ் பக்ரீ இயக்கியுள்ளார். தற்போது தாக்குதல் எதிரொலியாக இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளதால் இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் இருந்து இந்த படம் ரிலீஸ் ஆகாது என்று செய்திகள் வெளியானதாக கூறப்படுகிறது. மேலும் பாகிஸ்தான் நடிகர்கள் என்னை பாலிவுட் சினிமாவில் நடிக்கவும் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகிறது.