
தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய நிகழ்வுகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் டிடி. இவர் தன்னுடைய தொகுப்பாளர் பயணத்தை 20 வருடங்களாக தொடர்ந்து கொண்டிருக்கிறார். சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கிக் கொண்டிருக்கும் இவரின் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் பிரபலமானது. தற்போது இசை நிகழ்ச்சிகள் மற்றும் தனியார் நிகழ்ச்சிகள் என ஸ்பெஷலான நிகழ்ச்சிகளில் பணியாற்றி வருகின்றார்.
அதே சமயம் சமீபத்தில் காபி வித் காதல் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். இதனிடையே காலில் அடிபட்டு நீண்ட நாட்களாக நடக்க முடியாமல் ஓய்வில் இருந்த டிடி தற்போது பழைய நிலைமைக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் கருப்பு நிற ஆடை அணிந்து ஆங்கில பாடல் ஒன்றுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோவை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க