
சென்னை மாவட்டத்தில் உள்ள புது வண்ணாரப்பேட்டை பகுதியில் 35 வயது உடைய பெண் வாசித்து வருகிறார். ஜனவரி 19-ஆம் தேதி இரவு அந்த பெண் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் பெண்ணின் அந்தரங்க பகுதியை தொட்டு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் திடுக்கிட்டு எழுந்த பெண் அலறி சத்தம் போட்டார். இதனால் அந்த பெண்ணின் கணவர் எழுந்து மர்ம நபரை பிடிக்க முயன்றார்.
அதற்குள் மர்ம நபர்கள் வீட்டின் கதவை வெளிப்புறமாக தாழிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அத்திப்பட்டு பகுதியை சேர்ந்த சையது அப்துல் காதர்(32) என்பவரை கைது செய்தனர். அவர் நீதிமன்றத்தில் அஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.