பெரும் பரபரப்பை ரூ.30,000 கோடி தொடர்பாக தான் பேசியதாக வெளியான ஆடியோ ஜோடிக்கப்பட்டது எனவும், ஆடியோ விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குத் தொடுத்து அவர்களுக்கு தேவையில்லாத விளம்பரத்தை தேடித்தர விரும்பவில்லை. வெளியான ஆடியோ ஜோடிக்கப்பட்டது. என் நேரத்தை வீணடிக்காமல் எனது பணியை தொடர விரும்புகிறேன் என்றார் PTR.

இந்நிலையில் தனது குரலில் வெளியான ஆடியோ பொய்யானது, யார் குரலில் வேண்டுமானாலும் இப்படிப் பேசி வெளியிடலாம் என அமைச்சர் PTR சமாளிப்பதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். அதோடு, அந்த ஆடியோவில் பேசிய அதே கருத்தை தான் பேசுவதைப் போல ஒரு ஆடியோவை வெளியிடுமாறு சவால் விடுத்த அவர், தன்னுடைய குரல் மாதிரியை ஆய்வுக்கு வழங்க தயார் என்றும் PTRம் தனது குரல் மாதிரியை வழங்குமாரும், இரண்டையும் நீதிமன்றம் விசாரித்துக் கூறட்டும் என்றார்.