கேரளாவில் தொடர்ந்து வெளிவரும் பாலியல் குற்றச்சாட்டுகள், இந்திய சினிமா உலகிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. பாலிவுட், கோலிவுட் என அனைத்து திரைப்படத் துறைகளிலும் இது குறித்த விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலும் நடிகைகள் எதிர்கொள்ளும் பாலியல் தொல்லைகள் வெளி உலகிற்கு தெரியவர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழ் சினிமாவில் ராதிகா, குஷ்பு உள்ளிட்ட முன்னணி நடிகைகள் இந்த விவகாரம் குறித்து தங்கள் கருத்துகளை பகிர்ந்துள்ளனர். தற்போது, நடிகை கஸ்தூரி தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார். இயக்குநருடன் படுக்கையை பகிர மறுத்ததால் மூன்று படங்களில் இருந்து தூக்கி எறியப்பட்டதாகவும், ஹீரோவுடன் ஒத்துப்போக முடியாது எனக்கூறி ஒரு படத்தில் இருந்து தானே விலகிவிட்டதாகவும் கஸ்தூரி தெரிவித்துள்ளார்.