தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கலக்கியவர் தான் நடிகை நளினி. விஜயகாந்த் மற்றும் சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தன்னுடைய நடிப்பால் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கட்டி போட்டவர். இப்படி சினிமாவில் பிஸியாக இருந்த நளினி தன்னுடன் நடித்த நடிகர் ராமராஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில் இருவரும் சில காலம் மட்டுமே ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர். அதன் பிறகு விவாகரத்து செய்து பிரிந்து விட்ட நிலையில் தற்போது தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.

இப்படியான நிலையில் நளினி சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது விவாகரத்துக்கான காரணம் குறித்து பேசி உள்ளார். ராமராஜனை எனக்கு கணவராக தான் ரொம்ப பிடிக்கும். ஏழு ஜென்மம் எடுத்தாலும் அவர்தான் எனக்கு மீண்டும் கணவராக வர வேண்டும் என கடவுளிடம் வேண்டிக் கொள்வேன். இன்றும் என் பிள்ளைகள் விசேஷத்தில் அவரும் நானும் சந்திக்கும்போது நன்றாக பேசிக் கொள்வோம். நாங்கள் இருவரும் ஒன்றாக இருந்தால் பிள்ளைகளுக்கு நல்லது இல்லை என்று ஜாதகத்தில் சொன்னதால் நாங்கள் விவாகரத்து பெற்று பிரிந்தோம். என் கணவருக்கு ஜாதகம் நம்பிக்கை அதிகமாகவே உள்ளது. விவாகரத்து பெற்று பிரியும்போது கூட அவர் என் கையை இறுகப் பிடித்துக் கொண்டார் என நளினி வெளிப்படையாக பேசியுள்ளார்.