
தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடியை சேர்ந்தவர் துரைப்பாண்டி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. கொரோனா தொற்று காலத்தில் வேலை இல்லாததால் ராமநாதபுரம் வழி விடு முருகன் ஆலயத்தில் துரைப்பாண்டியும், முத்துக்குமார் என்பவரும் யாசகம் பெற்று வாழ்ந்து வந்தனர்.
இதில் மதுரையைச் சேர்ந்த முத்துக்குமாருக்கு திருமணமாகி மனைவியும் மூன்று மகள்களும் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் குடும்பத்துடன் மேற்பட்ட தகராறு காரணமாக முத்துக்குமார் துரைப்பாண்டியுடன் யாசகம் பெற்று வாழ்ந்து வந்தார்.
கடந்த 2022-ஆம் ஆண்டு காசை பிரித்துக் கொள்வது தொடர்பாக நண்பர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது மது போதையில் இருந்து துரைப்பாண்டி முத்துக்குமாரை பீர் பாட்டில் மற்றும் கட்டையால் அடித்து கொலை செய்தார்.
இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் துரைப்பாண்டியை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த ராமநாதபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் துரைப்பாண்டிக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவு பிறப்பித்தது.