
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அதிமுகவில் அடிமட்ட தொண்டன் முதல் நிர்வாகிகள் அனைவரும் சேர்ந்ததுதான் பொதுச் செயலாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று எம்ஜிஆர் உருவாக்கிய விதியை மாற்றி தான் எடப்பாடி பழனிச்சாமியை பொதுச் செயலாளராக தேர்வு செய்தனர் என்று விமர்சித்த நிலையில் கண்டிப்பாக அதிமுகவில் ஒரு அடிமட்ட தொண்டன் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வருவார் என்றும் அந்த ரகசியம் எனக்கு தெரியும் என்றும் ஆனால் அதனை இப்போது உங்களிடம் கூற முடியாது என்றும் கூறினார். அதோடு அதிமுகவில் பொதுச் செயலாளர் என்ற பதவி காணாமல் போகும் என்றும கூறினார். இதற்கு தற்போது அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் நிருபர்கள் கேட்டபோது நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும் போது எதற்காக அந்த கொசுவை பற்றி என்னிடம் கேட்கிறீர்கள் என்று கூறினார்.
அதன் பிறகு நாட்டில் பல பிரச்சனைகள் இருக்கும்போது அதை எல்லாம் விட்டுவிட்டு இந்த கொசுவை பற்றி பேசுவது தான் தற்போது முக்கியமா என்றார். பின்னர் பதிலளித்த அவர் மீண்டும் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவி வரும் என்றும் அந்த ரகசியம் எனக்கு தெரியும் என்றும் ஓபிஎஸ் கூறுகிறார். அப்போது அந்த ரகசியத்தை கூற வேண்டியது தானே. முன்னதாக நீட் தேர்வினை ரத்து செய்யும் ரகசியம் தனக்குத் தெரியும் என்று உதயநிதி கூறினார். ஆனால் இதுவரை நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை அந்த ரகசியமும் வெளிவரவில்லை. தற்போது அதே தொற்று ஓ பன்னீர் செல்வத்திற்கும் வந்துவிட்டது. அது என்ன பெரிய சிதம்பர ரகசியமா ரகசியம் என்னவென்று தெரிந்தால் சொல்ல வேண்டியது தானே. மேலும் கடந்த 4 வருடங்களாக ஓபிஎஸ் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் செய்யும் விஷயங்கள் கண்டிப்பாக அதிமுக தொண்டர்களிடம் எடுபடாது என்று கூறினார்.