தென்காசி அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் டேவிட் மைக்கேல் என்பவர் கணித ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் மூன்று மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து மாணவிகள் பள்ளி ஆசிரியரிடம் தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியை மாணவிகளின் பெற்றோரிடம் நடந்தவற்றை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் டேவிட் மைக்கேல் மருத்துவ விடுப்பில் சென்று தலைமறைவாகி விட்டார். இந்த நிலையில் தீவிர தேடுதலுக்கு பிறகு போலீசார் தலைமறைவாக இருந்த டேவீட்டை கண்டுபிடித்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.