18வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரானது வருகிற 22ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இதற்கு அனைத்து அணியினரும் தங்களை தீவிரமாக பயிற்சியில் ஈடுபடுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களை கருதி கொல்கத்தா லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதும் ஆட்டம் மாற்றப்படும் என்று கூறப்படுகிறது.

அதாவது அன்று ராம நவமி என்பதன் காரணமாக தங்களால் போட்டிக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்று மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்திடம் கொல்கத்தா போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனால் கொல்கத்தா- லக்னோ மோதும் போட்டிக்கான தேதி மாற்றப்படுகிறது. கடந்த வருடம் ராம நவமியின் போது இதே மாதிரி போட்டி அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.