சினிமாவை சேர்ந்த நடிகைகள் அவ்வப்போது தங்களுடைய பேட்டியின் பொழுது மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அசவுகரியங்கள் குறித்து ஓப்பனாக பேசி வருகிறார்கள். அது குறித்து வீடியோக்களும் தற்போது கவனம் பெற்று வருகிறது. அந்த வரிசையில் நடிகை சாய் பல்லவி மாதவிடாய் நேரத்தில் நடனம் ஆடுவது மிகவும் சங்கடமாக இருக்கும் .பல படங்களில் அந்த நேரத்தில் டான்ஸ் ஆடியுள்ளேன். எதிர்மறையான சூழ்நிலைகளை தவிர்த்து முன்னேற வேண்டும் என்று கூறினார்.

மேலும் சுருதிஹாசன் மாதவிடாய் நேரத்தில் சிறப்பாக செயல்பட முடியாது.   அந்த நேரத்தில் உட்கார்ந்து ஏதாவது சாப்பிடணும் போல இருக்கு. ஆனால் எப்போதும் அது நடக்காது. நடிப்பதும் ஆடுவதும் அந்த நேரத்தில் கடினமாக இருக்கும் என்று வேதனை தெரிவித்தார். மேலும் நடிகர் ராதிகா ஆப்தே மாதவிடாய் வலி ஏற்படும் போது வேலை செய்வதில்லை . மாதவிடாய் பிரச்சினையாக பார்க்கவில்லை கௌரவமாக உணர்கிறேன். மாதவிடாய் முதல் இரண்டு நாட்களில் படப்பிடிப்பில் சில சலுகைகள் இருந்தால் நன்றாக இருக்கும்.