இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் ரீல்ஸ்  மோகம் என்பது அதிகரித்து வருகிறது. இதனால் அவர்கள் பல விபரீதமான செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். சில சமயங்களில் ஆபத்தை கூட உணராமல் ரீல்ஸ் வீடியோவுக்காக ரிஸ்க் எடுக்கிறார்கள். அந்த வகையில்  வாலிபர் ஒருவர் தற்போது பாலத்தின் மீது தண்டால் எடுத்தவாறு ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதாவது திருச்சியில் கொள்ளிடம் பாலம் உள்ளது. இங்குள்ள சிமெண்ட் தடுப்பு சுவரில் ஒரு வாலிபர் தண்டால் எடுத்தவாறு ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.