தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியலில் கால் பதித்தார். அவர் மீது ஆரம்பத்தில் பெரிய அரசியல் வெளிச்சம் இல்லை. ஆனால் அடுத்த மூன்று வருடத்தில் அரசியலில் மையப் புள்ளியாக மாறி இருக்கிறார். இந்திய அரசியலிலும் முக்கிய நபராக முன்னேறியுள்ளார். இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த உலகப் புகழ் பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கப்படும் சர்வதேச அரசியல் என்ற தலைப்பில் படிப்பை படிக்க தேர்வாகியிருக்கிறார்.

இந்த படிப்பு சுமார் 17 வாரங்கள் கொண்டது. இந்தியாவிலிருந்து 12 பேர் இந்த படிப்புக்கு தேர்வாகியுள்ளனர் . அதில் அண்ணாமலையும் ஒருவர். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் செவனிங் உதவித்தொகை மூலமாக சர்வதேச அரசியல் படிப்பிற்கு அண்ணாமலை தேர்வாகியிருக்கிறார். இந்த உதவி தொகை படிப்பு மற்றும் தங்குவதற்கான அனைத்து செலவையும் அந்த பல்கலைக்கழகமே ஏற்றுக் கொள்கிறது. இந்த படிப்பானது வரும் செப்டம்பர் மாதத்தில் தொடங்குகிறது.