
கடலூர் மாவட்டத்தில் உள்ள மேல் புளியங்குடியில் ஆனந்த்(24) என்பவர் வசித்து வருகிறார். இவர் பொறியியல் பட்டப்படிப்பு படித்துள்ளார். இந்த நிலையில் அதே பகுதியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் ஜீவா என்பவரும் ஆனந்தும் நண்பர்களாக பழகி வந்தனர். ஒரு நாள் ஆனந்த் ஜீவாவை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்துள்ளார். அதற்கு ஜீவா மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஜீவா ஒரு பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்தார். இதனை அறிந்த ஆனந்த் இன்ஸ்டாகிராமில் அந்த பெண்ணுடன் பேசியதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைத்துக்கொண்டார்.
பின்னர் தன்னுடன் ஓரினச்சேர்க்கைக்கு ஈடுபடாவிட்டால் அந்த பெண்ணுடன் பேசுவதை மற்றவர்களிடம் சொல்லிவிடுவேன் என கூறி ஜீவாவை மிரட்டியுள்ளார். இதனால் கோபமடைந்த ஜீவா ஆனந்தின் செல்போனை பிடுங்கி உடைத்தார். கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மூன்றாம் தேதி பள்ளிக்கு சென்று கொண்டிருந்த ஜீவாவை ஆனந்த் வழிமறித்து கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஆனந்தை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த கடலூர் போக்சோ நீதிமன்றம் ஆனந்துக்கு ஆயுள் தண்டனையும், 20000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.