தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நமீதா. இவருக்கு திருமணமான நிலையில் இரட்டை ஆண் குழந்தைகள் இருக்கிறது. திருமணத்திற்கு பிறகு நடிகை நமீதா படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இவர் பாஜக கட்சியின் நிர்வாகியாக இருக்கிறார். இந்நிலையில் நடிகை நமீதா ஒரு பேட்டியில் தன் வாழ்க்கையில் நேர்ந்த கசப்பான அனுபவம் குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, என்னுடைய உடல் தோற்றம் மற்றும் சமநிலையற்ற ஹார்மோன் பிரச்சனைகள் குறித்து மற்றவர்களுக்கு தெரியாது. இதை யாரிடமாவது சொன்னால் கூட சாதாரண பிரச்சனைதான் என்று கூறுகிறார்கள்.

இருப்பினும் எனக்கு அது மிகுந்த மன அழுத்தத்தை கொடுக்கிறது. நான் ஒரு நிகழ்ச்சியில்  கலந்து கொண்டிருந்தபோது என் உடல் எடை கூடிய புகைப்படத்தை குளோசப்பில் வெளியிட்டு ஏதோ ஏதோ கருத்து பகிர்ந்தார்கள். அது எனக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியது. இதனால் 25 கிலோ வரை உடல் எடையை குறைத்தேன். தற்போது எல்லோரிடமும் இன்டர்நெட் வசதி இருப்பதால் மனதில் நினைத்ததை வெளியே காட்டுகிறார்கள். என்னை பற்றி அவதூறு கருத்துக்கள் வெளியிடுபவர்கள் மீது புகார் கொடுக்கலாம் என்று என் கணவர் கூறினார். ஆனால் நான் அவரிடம் வேண்டாம் என்று கூறிவிட்டேன். மேலும் என்னை பற்றி மோசமாக விமர்சித்த ஒருவரின் விவரங்களை குறிப்பிட்டு நான் புகார் அளிக்கிறது என்று கூறினார்.