
தமிழகத்தில் ஜாதியின் பெயர் கொண்ட பாடல்கள், சினிமா மற்றும் தனி இசை பாடல்கள் எதுவாயினும் அதனை பொது ஒலிப் பெருக்கிகளில் பொது இடத்தில் ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும். எவர் பாடல்களிலும் உசுப்பேற்றும் ஜாதிய துவேஷம் மறைமுகமாக இருந்தாலும் கூட தணிக்கையில் தடை விதிக்க வேண்டும் என்று இயக்குனர் சீனு ராமசாமி முதல்வர் ஸ்டாலினுக்கு இயக்குனர் சீனுராமசாமி வலியுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் சாதியின் பெயர் கொண்ட பாடல்கள்
சினிமா &
தனி இசை பாடல்கள்
எதுவாயினும்
அவற்றை பொது ஒலிப்பெருக்கிகளில் பொதுவிடத்தில்
ஒலிபரப்பத் தடைவிதிக்க வேண்டும் என பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.எவர் பாடல்களிலும் உசுப்பேற்றும் சாதிய துவேஷம் மறைமுகமாக இருந்தாலும் கூட தணிக்கை +தடை…
— Seenu Ramasamy (@seenuramasamy) June 23, 2023