
இந்துக்களும், முஸ்லிம்களும் சகோதரர்களாக வாழும் மாநிலம் தான் தமிழ்நாடு என்றும் திருப்பரங்குன்றம் விவகாரத்தை பெரிதாக்கி லாபமடைய வேண்டாம் என்றும் தீய சக்திகளை ஒடுக்குவோம் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ” ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றி திமுகவிற்கு உறுதி செய்யப்பட்ட வெற்றி. அதேபோல வரக்கூடிய தேர்தலையும் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும். எந்தவித சந்தேகமும் கிடையாது. தமிழ்நாட்டில் மாற்று மதத்தினர் எப்போதும் அண்ணன் தம்பிகளாக இருந்து வருகிறோம். அந்த இடத்தில் சிலர் ஏதாவது கலவரத்தை தூண்ட முடியுமா என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
நிச்சயம் அது நடக்காது. எங்களை பொறுத்தவரை நிச்சயம் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நல்ல முடிவு கிடைக்கும். ஈசிஆர் விவகாரத்தில் திமுகவுடன் அவருக்கோ அவரது குடும்பத்திற்கோ ஒரு தொடர்பும் கிடையாது. எங்களோடு தொடர்பில்லாதவர்கள் எப்படி எங்களோடு முடிச்சு போட முடியும். வீண் பழி சுமத்திய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தான் வெட்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.