சட்டப்பேரவை தொடங்கியதுமே இன்றும் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றபட்டார்கள். மேலும்  நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கேள்வி நேரத்திற்கு பின்பு பேச அனுமதி தருகிறேன் என பேரவை விதிகளை சபாநாயகர் சுட்டிக்காட்டிய பின்பும் தொடர்ந்து அதிமுகவினர் இருக்கையில் அமராமல் அமளியில் ஈடுபட்ட நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அதிமுக வீண் விளம்பரம் தேட முயற்சிப்பதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். தொடர்ந்து மூன்றாவது நாளாக அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர் வெளியேற்றப்பட்ட பின்னர் பேசிய முதல்வர், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அக்கறையுடன் அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது என்றார்.