சின்னத்திரையில் பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலமாக அறிமுகமானவர் நடிகை ரச்சிதா. அதன் பிறகு சரவணன் மீனாட்சி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்த இவர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். இந்த நிலையில் ரச்சிதா அளித்த பேட்டி ஒன்றில், நான் ஆண்களைப் பார்த்து ஏங்கி இருக்கிறேன்.

ஏனென்றால் நிகழ்ச்சிகள் அல்லது வேலைக்கு தயாராக வேண்டும் என்றால் ஐந்து நிமிடம் போதும் தயாராகி விடுவார்கள். ஆனால் பெண்களுக்கு அப்படி இல்லை எங்களால் தயாராக முடியவில்லை. புடவை அணிவதில்  சிரமப்பட்டு வருகிறேன். ஆண்கள் ஐந்து நிமிடத்தில் முடிக்கக்கூடிய வேலை பெண்கள் 15 வயது 30 நிமிடங்கள் செய்ய வேண்டி இருக்கிறது என்று ஆதங்கம் தெரிவித்துள்ளார்.