
ஐபிஎல் 2024 போட்டியில் லக்னோ எகானா ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையேயான ஆட்டத்தின் போது, சிக்ஸர் பந்தை பிடிக்க முயன்ற பால் கேர்ள் ஒருவரை பந்து நேரடியாக தாக்கிய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்தது. மும்பை இந்தியன்ஸ் இன்னிங்ஸின் 5-வது ஓவரில் சூர்யகுமார் யாதவ் ஆவேஷ் கான் வீசிய பந்தை டீப் ஸ்கொயர் பகுதிக்கு வெறித்தனமாக அடித்தார். பந்து கிளீன் ஹிட் ஆகாத போதும், சூரியகுமார் அடித்த வேகத்தில் அது பறந்து சென்றது.
— Drizzyat12Kennyat8 (@45kennyat7PM) April 4, 2025
அந்த சிக்ஸர் பந்தை பிடிக்க முயன்ற பால் கேர்ள், பந்தை சரியாக கவனிக்க முடியாமல், பந்து நேரடியாக அவரின் மார்பின் மீது தாக்கியது. அந்த பந்து கடுமையாக மார்பில் தாக்கிய போதும், அந்த பால் கேர்ள் தைரியமாக நடந்து சென்று பந்தை எடுத்து மீண்டும் LSG வீரரிடம் கொடுத்தார். அவரது மன உறுதியும், திடமாக செயல்பட்ட விதமும் சமூக வலைதளங்களில் பாராட்டை பெற்றுள்ளது. இதே போட்டியில் ஹார்திக் பாண்ட்யா ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ஒரு கேப்டனாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.