பிஸியாக நடித்து வரும் யோகி பாபு படத்தின் நாயகனாக சில படத்தில் நடித்து வருகிறார். மண்டேலா, பொம்மை நாயகி போன்ற படங்களில் நடித்து வெற்றி கண்டார். அவரது நடிப்பில் அடுத்து வெளியாக போகும் படம் தான் குய்கோ. இத்திரைப்படத்தின் ரிலீஸ் நெருங்குவதால் யோகி பாபு நிறைய பேட்டிகள் கொடுத்து வருகின்றார்.

அப்படி ஒரு பேட்டியில் அதிகம் கூகுளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். சில கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்துள்ளார். தனது வயது மற்றும் சம்பளம் பற்றிய கேள்விக்கு பதில் அளிக்க மறுத்துள்ளார். தனக்கு பிடித்த காமெடி நடிகர்கள் கவுண்டமணி, செந்தில், எம்.ஆர்.ராதா என கூறியுள்ளார்.