
பெங்களூரில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூரு மற்றும் சென்னை அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்தது. இந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் டு பிளேசிஸ் 54 ரன்கள் குவித்தார்.
இதனையடுத்து சென்னை அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ருதுராஜ் கோல்டன் டக் முறையில் அவுட் ஆனார். அதன் பிறகு ரகானே மற்றும் ரச்சின் ஜோடி அதிரடியாக விளையாடிய நிலையில் ரகானே 33 ரன்னிலும், ரச்சின் 61 ரன்னிலும் அவுட் ஆனார். இதனையடுத்து தோனி மற்றும் ஜடேஜா ஜோடி விளையாடினர். இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஆர்சிபி 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் இதனால் பிளே ஆப் சுற்றில் இருந்து சென்னை வெளியேறிய நிலையில் 4-வது அணியாக ஆர்சிபி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.