அதிவேகமான 5G சேவைகளை நாடு முழுவதுமாக வெகு விரைவில் வழங்கும் நோக்கத்தோடு மத்திய டெலிகாம் துறை 5ஜி அலைக்கற்றைகளின் (spectrum) ஏலத்தை இன்று தொடங்க இருக்கிறது. இந்த ஏலத்தில் சுமார் 96,000 கோடி ரூபாய் மதிப்பிலான 5ஜி அலைக்கற்றையானது ஏலம் விடப்பட்ட இருக்கிறது.

இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், மற்றும் வோடபோன் ஐடியா போன்ற பல முன்னணி தனியார் டெலிகாம் நிறுவனங்கள் மட்டுமே  பங்கேற்க இருக்கிறது.  BSNL மற்றும் MTNL போன்ற அரசு நிறுவனங்கள் தற்போது 4ஜி சேவை அறிமுகப்படுத்தி வருவதால் இவைகளுக்கு 5ஜி அலைக்கற்றை தேவைப்படாது. எனவே இந்த ஏலத்தில் ஜியோ – ஏர்டெல் இடையே கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.