அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி செயல்படும் பார்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி செயல்பட்ட 4 பார்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், கலால் துறை, காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளை கொண்ட குழு அமைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி செயல்படும் பார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். எனவே இனி அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பார்கள் செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.