
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகாவில் சட்ட விதிகளுக்கு முரணாக உரிய அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்த இறால் பண்ணைகளை மூட வேண்டும் என மீன்வளத்துறை உதவி இயக்குனர் கடந்த 2018 ஆம் ஆண்டு உத்தரவிட்டார்.
இந்த வழக்கை எதிர்த்த மனுவின் மீதான விசாரணையில், இரண்டு கிலோமீட்டருக்கும் இருக்க வேண்டிய இறால் பண்ணைகள் நீண்ட தூரம் தள்ளி உள்ளது எனவும் உரிய அனுமதிகளை பெறவில்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் 134 இறால் பண்ணைகளை மூட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உத்தரவிட்டுள்ளார்.