
சென்னையில் நேற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடிகர்கள் சங்கம் இணைந்த ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அனைத்து கழகங்களும் கலந்து கொண்டன. அதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் 6 முக்கிய தீர்மானங்கள் திரைத் துறையில் நிறைவேற்றப்பட உள்ளதாக அறிக்கையை வெளியிட்டது. அந்த தீர்மானத்தில் திரைத் துறையை மறுசீரமைப்பு செய்ய வேண்டிய தேவை உள்ளது.
அதற்காக ஆகஸ்ட் 16 ம் தேதிக்கு பிறகு புதிய திரைப்படங்களுக்கான சூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது. அதோடு நவம்பர் 1 ம் தேதி முதல் சினிமாவில் அனைத்து விதமான படப்பிடிப்பு தொடர்பான பணிகள் நிறுத்தப்படும் என்றும் அறிவித்தது. இந்த முடிவை எதிர்த்து தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த முடிவு தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கத்தை ஆலோசிக்காமல் படபிடிப்புகளை நிறுத்துவதாக அறிவித்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த முடிவை வாபஸ் பெற வேண்டும் என்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு வலியுறுத்துள்ளது.