
இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில் மாநில அரசுகள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தீபாவளி பரிசு தொகை வழங்கி வருகிறது. அதன்படி திரிபுரா மாநிலத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு தீபாவளி பரிசு வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் தீபாவளி பரிசாக ஒரு லிட்டர் கடுகு எண்ணெய், ஒரு கிலோ பருப்பு, இரண்டு கிலோ மாவு, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் 500 கிராம் ரவா ஆகியவை பரிசு தொகுப்பில் வழங்கப்படும் என திரிபுரா மாநில அரசு அறிவித்துள்ளது.
தற்போது கடுகு எண்ணெய் ஒரு லிட்டர் 113 ரூபாய் என்ற சிறப்பு விரைவில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் ரேஷன் கடைகளில் கடுகு எண்ணெய் லிட்டர் ஒன்றுக்கு 128 ரூபாய்க்கு விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு 15 ரூபாய் கூடுதல் மானியமாக வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.