தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை தொடங்கிய நிலையில், கடந்த மாதம் முதல் மாநாட்டினை நடத்தி முடித்த நிலையில் சமீபத்தில் மாநாடு நடத்த நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு விருந்து மற்றும் பரிசு பொருட்கள் வழங்கினார். அப்போது ஒரு விவசாய குடும்பம் விஜயின் கன்னத்தை கிள்ளினர். இது தொடர்பான புகைப்படத்தை நடிகர் விஜயின் ரசிகர்கள் உங்க வீட்டு செல்ல பிள்ளை விஜய் என்று கூறி இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.

முன்னதாக அரசியல் கட்சியினை  தொடங்கிய விஜய் தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு எம்ஜிஆர் ஆட்சி மீண்டும் அமையும் என்று கூறியுள்ளார். மேலும் திமுகவை நேரடியாக விமர்சிக்கும் விஜய் பாஜகவை கூட மறைமுகமாக விமர்சிக்கிறார். இந்த நிலையில் முதல்வர் எம்ஜிஆருடன் இருக்கும்போது மக்கள் மற்றும் விஜயுடன் இருக்கும் விவசாயி ஆகியோரின் புகைப்படங்களை ஒன்றாக இணைத்து தற்போது அவரின் ரசிகர்கள் வலைதளத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.