
இந்தியை ஏற்றுக்கொண்டால் தான் நிதி என மத்திய அமைச்சர் கூறியதை இபிஎஸ் கண்டிக்கவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டினர். அதற்கு பதிலளிக்கும் விதமாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, எந்த ஒரு காரணத்தை காட்டியும் தமிழ்நாடு மாணவர்களுக்கு சேர வேண்டிய நிதி ஒருபோதும் தடைபடக்கூடாது. மாணவர்களின் கல்விக்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை விடுவிக்காத மத்திய அரசை கண்டித்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி அன்று இபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்தியை ஏற்றுக் கொண்டால் தான் நிதி என்று மத்திய அமைச்சர் கூறியதை இபிஎஸ் கண்டிக்கவில்லை என செந்தில் பாலாஜி விமர்சித்ததற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.