
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தற்போது இவிஎம் வாக்கு இயந்திரம் குறித்து தெரிவித்துள்ள கருத்து உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் சமீபத்தில் ஏஐ தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் என்று அவர் எச்சரித்த நிலையில், தற்போது அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.
அவர் EVM வாக்கு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது. எனவே தேர்தலில் இந்த இயந்திரத்தை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும். மனிதர்களாலும் ஏஐ தொழில்நுட்பத்தினாலும் நிச்சயம் இவிஎம் இயந்திரம் ஹேக் செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்று தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் எலான் மஸ்கின் கருத்து உலக அளவில் புயலை கிளப்பியுள்ளது.