தமிழக வெற்றி கழகம் என்று அரசியல் கட்சியினை நடிகர் விஜய் கடந்த பிப்ரவரியில் தொடங்கிய நிலையில் கடந்த மாதம் முதல் மாநாட்டினை வெற்றிகரமாக நடத்தி முடித்தார். நடிகர் விஜய் முதல் மாநாடு நடத்தி முடிந்து நேற்றுடன் ஒரு மாதமாகும் நிலையில் அவருடைய முதல் மாநாடு பற்றிய பேச்சுகள் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் களம் காண்கிறது. அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் திராவிட கட்சிகளுக்கு சவாலாக அமையும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் விஜய்க்கு இணையாக நடிகர் அஜித்துக்கும் தமிழ் திரை உலகில் ரசிகர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள். நடிகர் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் மோதிக்கொண்டாலும் நடிகர் விஜயின் முதல் மாநாட்டின் போது அஜித் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு கொடுப்பது போன்று செய்த செயல்கள் சமூக வலைதளத்தில் வெளிவந்தது.

இந்நிலையில் அடுத்த வருடம் துபாயில் நடைபெற இருக்கும் ஒரு கார் ரேஸில் நடிகர் அஜித் கலந்து கொள்ளும் நிலையில் புதிதாக கார் கம்பெனி ஒன்றனையும் அஜித் தொடங்கியுள்ளார். இந்நிலையில் நடிகர் அஜித் நேற்று பந்தயத்தில் கலந்து கொள்ளும் காரை அறிமுகப்படுத்தினார். அந்தக் காரில் உள்ள வண்ணங்கள் தான் தற்போது சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. அதாவது நடிகர் விஜயின் கட்சி கொடியில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம் இருக்கிறது. இதே போன்று நடிகர் அஜித் அறிமுகம் செய்து வைத்த ரேஸ் காரில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்கள் இருக்கிறது. இதன் காரணமாக தமிழக வெற்றி கழகத்தின் கொடி போன்று கார் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மறைமுகமாக நடிகர் அஜித் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார் என்று சமூக வலைதளத்தில் வைரல் ஆக்குகிறார்கள். மேலும் அதே சமயத்தில் நடிகர் அஜித்தின் காரில் ‌ தமிழக அரசின் லோகோ இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.